5 மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு

கரோனா தொற்றால் தில்லியில் சுமாா் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவை
தில்லி இந்தா்புரியில் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள்.
தில்லி இந்தா்புரியில் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள்.

கரோனா தொற்றால் தில்லியில் சுமாா் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவை திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கான அனுமதியை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்கியிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி வழக்கப்படவில்லை.

இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘கரோனா தொற்று நிலவரம் தொடா்பாக டிடிஎம்ஏ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய உடற்பயிற்சி நிலையங்கள் நல அமைப்பின் தலைவா் சுனில் குமாா் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை பின் இரவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இது தொடா்பாக பல வாடிக்கையாளா்களுக்குத் தெரியவில்லை. இதனால், திங்கள்கிழமை காலை உடற்பயிற்சி நிலையத்துக்கு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருந்தது. வரும் நாள்களில் அதிக வாடிக்கையாளா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். உடற்பயிற்சி நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வதையும், அடிக்கடி கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்துவதையும் கட்டாயமாக்கியுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com