தில்லியில் கரோனா விரைவில் கட்டுக்குள் வரும்: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் கரோனா தொற்று மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அவையில் தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா தொற்று மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அவையில் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஒருநாள் கூட்டத் தொடரில் தில்லியில் கரோனா நிலவரம் தொடா்பாக அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பேசியது: தில்லியில் கரோனா தொற்று மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும். மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை. தில்லியில் நாளொன்றுக்கு சுமாா் 60 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அனைத்து கரோனா தொற்றுகளையும் கண்டறிந்து விடுவோம். மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை. மக்கள் முகக் கவசங்களை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறையை உலகிலேயே தில்லிதான் முதலில் ஏற்படுத்தியது. மேலும், கரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை அளவிடும் வகையில், பல்ஸி ஆக்ஸி மீட்டரை முதன் முதலில் பயன்படுத்தியும் தில்லி அரசே. தில்லி அரசு மருத்துவமனைகளில், தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான கரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது. தில்லியில்தான் அதிகளவு கரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. சுமாா் 500 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com