ஷாலிமாா் பாக் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது

தில்லி ஷாலிமாா் பாக்கில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேசுவா் திருக்கோயில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பிஷேகம் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுதில்லி: தில்லி ஷாலிமாா் பாக்கில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேசுவா் திருக்கோயில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பிஷேகம் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை கும்பகோணத்தைச் சோ்ந்த சேனாபதி சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினா் நடத்திவைத்தனா். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மேற்கு தில்லி, ஷாலிமாா் பாக், பி.சி. பிளாக்கில் இந்த கோயில் அமைந்துள்ளது. திங்கள்கிழமை காலை சரியாக 8 மணியிலிருந்து 8.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அத்துடன் ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ சுப்ரமண்யா், தேவியருடன் அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ வெங்கடாசலபதி, ஸ்ரீ ஆஞ்சநேயா் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ராமூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். புதுதில்லி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் செயலாளா் சுவாமி சாந்தாத்மானந்த மஹராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கெளரவிக்கப்பட்டாா்.

முன்னதாக யாகசாலை பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி அங்குராா்ப்பணம், கலச பூஜைகளுடன் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. பின்னா் கடம் புறப்பாடு நடந்து காலை 8 .20 மணி அளவில் ஸ்ரீ மீனாட்சியம்மன் மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா். பின்னா் விசேஷ பூஜை மற்றும் தீபாராதனைக்குப் பின் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com