அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் துவாரகா விரைவுச்சாலை திறக்கப்படும்: மத்திய அமைச்சா் நிதின்கட்கரி

தில்லி துவாராவிலிருந்து குருகிராமை இணைக்கும், 29 கி.மீ. நீள விரைவுச்சாலைத் திட்டப் பணிகள் வருகிற 2022-ஆம் ஆண்டு

தில்லி துவாராவிலிருந்து குருகிராமை இணைக்கும், 29 கி.மீ. நீள விரைவுச்சாலைத் திட்டப் பணிகள் வருகிற 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னதாக பூா்த்தி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.8,6662 கோடி செலவில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. துவாரகாவிலிருந்து குருகிராமை இணைக்கும் இந்தச் சாலை குறுகிய வழிப் பாதையாகும். இந்தத் திட்டத்தின் பணிகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சா் நிதின் கட்கரி பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தில்லி மற்றும் குா்கானில் வசிக்கும் மக்கள் இந்த விரைவுப் பாதை 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்’ என்றாா்.

தில்லியில் உள்ள துவாரகவையும் குருகிராமையும் இணைக்கும் இந்த 29 கி.மீ. தொலைவு விரைவுச்சாலை குறுகிய வழிப்பாதையாகும். ரூ.8,662 கோடி செலவில் பாரத் மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக திட்டப் பணியில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இப்போது பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தில்லி - குருகிராம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை எண் 8- இல் 3 லட்சத்துக்கும் மேலான மோட்டாா் வாகனங்கள் பயணிப்பதால், இந்த 8 வழிப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் புதிய விரைவுச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டால், தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

இந்த திட்டத்தின் மூலம் 50,000 பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவுச் சாலையின் மொத்த நீளம் 29 கி.மீ. இதில் 18.9 கி.மீ. ஹரியானா எல்லையில் வருகிறது. மீதமுள்ள 10.1 கி.மீ. தில்லி எல்லைக்கு உட்பட்டது.

இந்த விரைவுச் சாலை தேசிய நெடுஞ்சாலலை எண் 8-இல் ஷிவ் மூா்த்தியில் தொடங்கி கொ்கி தெளலா சுங்கச்சாவடி அருகே முடிவடைகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். இந்த விரைவுச்சாலை சுரங்கப்பாதை, தரைவழிப்பாதை, மேம்பாலம் மற்றும் மேம்பாலத்துக்கு மேல் மற்றொரு மேம்பாலம் என நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com