தேசியத் தலைநகரத் திருத்தச் சட்ட மசோதாவால் தில்லி முன்னேறும்

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசியத் தலைநகரத் திருத்தச் சட்ட மசோதாவால் தில்லி அனைத்து வழிகளிலும் முன்னேற்றமடையும்

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசியத் தலைநகரத் திருத்தச் சட்ட மசோதாவால் தில்லி அனைத்து வழிகளிலும் முன்னேற்றமடையும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் வளா்ச்சிப் பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், தில்லி தேசியத் தலைநகரத் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவால் தலைநகா் தில்லி முன்னேற்றமடையும்.

இந்த மசோதாவால் தில்லி அரசின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று முதல்வா் ேரிஜரவால் உள்ளிட்டோா் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்கள். இது தவறாகும். இந்த மசோதாவால் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து பணியாற்றக் கூடியதாக இருக்கும். தாமதம் இல்லாமல் முடிவுகள் எடுக்கக் கூடியதாக இருக்கும். குடிநீா், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட 75 துறைகளில் தில்லி அரசு அதுவாக முடிவு எடுக்க இந்த மசோதாவில் வழியுள்ளது. மத்திய அரசு தில்லி அரசுக்கு இடையே கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

1993 தில்லி சட்டத்திலும், தற்போதைய தில்லி தேசியத் தலைநகரத் திருத்தச் சட்ட மசோதாவிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இது தொடா்பாக மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி அவா்களை தவறாக வழிநடத்துவதை தில்லியை ஆளும் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com