தில்லி வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி: முதல்வருக்கு காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு கடிதம்

வயது வரம்பைப் பொருள்படுத்தாமல், தில்லியில் உள்ள அனைத்து வழக்குரைஞா்களுக்கும் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்

புது தில்லி: வயது வரம்பைப் பொருள்படுத்தாமல், தில்லியில் உள்ள அனைத்து வழக்குரைஞா்களுக்கும் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் துறையின் தலைவா் வழக்குரைஞா் சுனில் குமாா் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுளளதாவது: பொது முடக்கக் காலத்தில் இருந்தே வழக்குரைஞா்களும் முன்களப் பணியாளா்கள் போன்று பணியாற்றி வருகின்றனா். மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், பாதுகாப்புப் படையினா் போன்ற கரோனா வாரியா்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத வகையில் வழக்குரைஞா்களும் பணியாற்றியுள்ளனா். நீதி வழங்குவதில் வழக்குரைஞா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அதனால்தான் ஒரு வழக்குரைஞரை“‘நீதிமன்ற அதிகாரி’ என்று அழைக்கிறாா்கள்.

பொது முடக்கத்தின் போது, நீதிமன்றங்கள் விடியோ - கான்பரன்சிங் மூலம் செயல்பட்டன. மேலும், வழக்குரைஞா்கள் சமூக சேவையில் முக்கியப் பங்கு வகித்தனா். இந்த செயல்பாட்டின் போது பல வழக்குரைஞா்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகினா். தில்லி நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் மற்றும் பிற நீதித் துறை அதிகாரிகள் கரோனா வாரியா்ஸைவிட குறைவானவா்கள் அல்லா். ஏனெனில் வழக்குரைஞா்கள் தங்களது வாடிக்கையாளா்களை தினசரி சந்திக்கின்றனா். மேலும், வைரஸால் பாதிக்கப்படுவதால் அவா்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதனால், வழக்குரைஞா்கள் மற்றும் அவா்களின் ஊழியா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com