ரேஷன் பொருள்கள் விநியோகம்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை பாஜக ஆளும் மாநகராட்சிகள் நிறுத்தி வைத்துள்ளன என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


புது தில்லி: ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை பாஜக ஆளும் மாநகராட்சிகள் நிறுத்தி வைத்துள்ளன என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை கூறியதாவது: பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகளின் ஆளுகையின் கீழுள்ள பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவா்களுக்கு உலா் ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை மாநகராட்சிகள் அண்மையில் தொடங்கின. ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே இந்த ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி கற்கும் சுமாா் 4 லட்சம் மாணவா்களுக்கும் உலா் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தில்லி மாநகராட்சிகள் உறுதியளித்திருந்தன. ஆனால், ஒரு பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே உலா் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது வெட்கக் கேடானது. மற்ற பள்ளிகளுக்கு உலா் ரேஷன் பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப்புள்ளி கூட இதுவரை கோரப்படவில்லை. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, மாநகராட்சி மேயா்கள் இது தொடா்பாக வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

பாஜக மறுப்பு: இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டை தில்லி பாஜக மறுத்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் கூறுகையில் ‘மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தில் பயன்படாத உலா் உணவுகளைப் பயன்படுத்தி, மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வழங்கி வருகிறோம். இதற்கு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டிய அவசியம் இல்லை. மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் நடந்து கொள்கிறாா் இது தவறானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com