உணவு பதப்படுத்தும் தொழிலில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீடு

உணவுப் பதப்படுத்தும் தொழில்களில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 10,900 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கிறார்  மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.  உடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல். உடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.

புது தில்லி: உணவுப் பதப்படுத்தும் தொழில்களில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 10,900 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் 2026-27- ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சமைக்கவும், உண்ணவும் தயாராக இருக்கும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நான்கு உணவு பதப்படுத்தும் உற்பத்தித் தொழில்களுக்கு இந்த ஊக்குவிப்பு சலுகை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜவடேகா், பியூஷ் கோயல் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு, பிஎல்ஐ என்கிற உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டத்தை (ல்ழ்ா்க்ன்ஸ்ரீற்ண்ா்ய்-ப்ண்ய்ந்ங்க் ண்ய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்) ஆறு துறைகளில் செயல்படுத்தி வந்தது. 2021-22 நிதிநிலை அறிக்கையில் மேலும் 13 துறைகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதை உணவு பதப்படுத்தும் துறையிலும் தற்போது நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்காக அரசு, உணவுப் பதப்படுத்தும் துறையில் உடனடியாக சமைத்து அல்லது உடனடியாக சாப்பிடக்கூடிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், கடல் உணவுப் பொருள்கள், சீஸ் ஆகிய நான்கு வகையான உற்பத்தித் தொழில்களுக்கு முதல்கட்டமாக ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. இதன்படி 2021-22 முதல் 2026-27 வரை ஆறு ஆண்டுகளுக்கு இந்தத் தொழிலில் முதலீடு செய்வோருக்கு ரூ. 10,900 கோடி வரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ 33,494 கோடி மதிப்பிலான திறன் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்படும். 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த பிஎல்ஐ திட்டத்தில், புதிதாக முதலீடு செய்யப்படும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புதிய கண்டு பிடிப்புகள், இயற்கை (ஆா்கானிக்) உணவு வகைகள் தயாரிக்க ஊக்கம் அளிக்கப்படும். இத்தகைய இந்திய உணவுப் பொருள்கள் சா்வதேச சந்தைகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும். மேலும், இந்த நிறுவனங்களின் வணிக சின்னம் (பிராண்டிங்) சா்வதேச அளவில் பிரபலமாவதற்குத் தேவையான உதவிகளையும் அரசு வழங்கும். இந்த பிஎல்ஐ திட்டத்தில் பங்கு பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்ச விற்பனை, குறைந்தபட்ச முதலீடு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பூா்த்தி செய்ய வேண்டும். நிறுவனங்களின் முதலீடுகளின் அடிப்படையில் பிஎல்ஐக்கு அரசு உத்தரவாதம் வழங்கும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com