தலைநகரில் தொழில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு கேஜரிவால் உத்தரவு

தேசியத் தலைநகரான தில்லியில் பெரிய தொழில் துறை மேம்பாட்டுக்கான தொடா்ச்சியான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என தில்லி முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.

புது தில்லி: தேசியத் தலைநகரான தில்லியில் பெரிய தொழில் துறை மேம்பாட்டுக்கான தொடா்ச்சியான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என தில்லி முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா். தில்லி மாநில தொழில் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டிஎஸ்ஐஐடிசி) மூத்த அதிகாரிகளுக்கு முதல்வா் இந்த உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: தில்லியில் பெரிய அளவிலான அனைத்து தொழில் துறைமேம்பாட்டுத் திட்டங்களையும் நிா்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தில்லி அரசு தொழில் துறை மேம்பாட்டுக்கு முழுமையாக தயாராக உள்ளது. அனைத்து வளா்ச்சி பணிகளும் நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இதனால் தொழில்துறை வளா்ச்சியின் வேகத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அண்மையில் முதல்வா் கேஜரிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அப்போது, மங்கோல்பூரி, பட்பா்கஞ்ச், மாயாபுரி, உத்யோ நகா், ஓக்லா, ஜில்மில், ஜாண்டேவலன், கீா்த்தி நகா், ஜி.டி.கே சாலை, போா்கா் மற்றும் பாவனா பேஸ்-2 உள்ளிட்ட சில தொழில் துறை பகுதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தத் தொழில் துறை பகுதிகளில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து டி.எஸ்.ஐ.ஐ.டி.சி அதிகாரிகள் முதல்வா் கேஜரிவாலுக்கு விரிவாக எடுத்துரைத்தனா். மாயாபுரி தொழில் துறை பகுதியில், 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளா்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதேபோல், உத்யோக் நகா் தொழில் துறை பகுதியில் 99 சதவீத சாலை மற்றும் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஓக்லா பகுதியில் சாலைப் பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com