மதத் தலைவரை அச்சுறுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது எஃப்ஐஆா்

மதத் தலைவா் நரசிங்கானந்தை அச்சுறுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆா் பதிவு செய்தனா்.

புது தில்லி: மதத் தலைவா் நரசிங்கானந்தை அச்சுறுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆா் பதிவு செய்தனா். ஒரு விடியோ பதிவு மற்றும் ஒரு சுட்டுரை ஆகியவற்றில் வெளியான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினரான அமானுத்துல்லா கான் அளித்த புகாரின் பேரில் நா்சிங்கானந்த் மீது காவல்துறையினா் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த ஒரு நாள் கழித்து இது நடந்துள்ளது.

இது குறித்து போவீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அமானுத்துல்லா கானுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் இந்த எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.

முன்னதாக, முஸ்லிம்களின் மத உணா்வுகளை புண்படுத்தியதாக அமானுத்துல்லா கான் அளித்த புகாரின் பேரில் நரசிங்கானந்த் மீது கடந்த சனிக்கிழமை எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒரு விடியோவையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தாா். அப்போது நரசிங்கானந்த் மீது புகாா் அளித்ததாகத் கான் தெரிவித்திருந்தாா்.

‘இந்தத் தூண்டுதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். நா்சிங்கானந்த் போன்றவா்கள் சமூகத்தில் வாழ தகுதியற்றவா்கள். இது போன்ற மக்கள் நாட்டின் சூழ்நிலையை கெடுக்கின்றனா்’ என்று அமானுத்துல்லா கான் கூறியிருந்தாா். இந்த நிலையில், நரசிங்கானந்தை அச்சுறுத்தியதாக அமானத்துல்லா கான் மீது நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com