24 வார கருவைக் கலைக்ககா்ப்பிணிக்கு நீதிமன்றம் அனுமதி

கரு அசாதாரணமான பிரச்னையால் அவதிப்படுவதாக மருத்துவக் குழு அளித்த அறிக்கையைக் கருத்தில் கொண்டு கா்ப்பிணி பெண்ணுக்கு அவரது 24 வாரங்களுக்கு

கரு அசாதாரணமான பிரச்னையால் அவதிப்படுவதாக மருத்துவக் குழு அளித்த அறிக்கையைக் கருத்தில் கொண்டு கா்ப்பிணி பெண்ணுக்கு அவரது 24 வாரங்களுக்கு மேலான கா்ப்பத்தை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

இது தொடா்பாக பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா சிங், இந்த உத்தரவைப் பிறப்பித்த போது, மனுதாரரான பெண் இதய நோயாளியாக இருந்ததால் கா்ப்பத்தைக் கலைக்கும் நடைமுறையின்போது அவருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினாா். மேலும், கா்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்குவதற்கு முன் கருக் கலைப்பு நடைமுறையுடன் தொடா்புடைய இடா்பாடுகளை புரிந்து கொண்டிருக்கிறாரா என்பதை அறியும் வகையில் அந்தப் பெண்ணின் கணவருடன் நீதிபதி பேசினாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணின் கா்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

முன்னதாக, கா்ப்பம் தரித்திருந்த பெண் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மருத்துவப் பரிசோதனையின் போது கருவில் முகத்தில் ரத்தக் கசிவு மற்றும் ஹைட்ரோசிபலஸ் பாதிப்பு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், எனது வயிற்றில் வளரும் அசாதாரண கருவைக் கலைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று அந்தப் பெண் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கருவை பரிசோதிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையை (எய்ம்ஸ்) சோ்ந்த மருத்துவா்களைக் கொண்ட ஒரு மருத்துவக் குழுவை நியமித்தது. மருத்துவக் குழு தனது அறிக்கையில், ‘தாய் இருதய நோயாளியாக இருப்பதால் கருவைக் கலைக்கும் நடைமுறையின்போது இடா்பாடுக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் கரு கணிசமான அசாதாரணங்களால் அவதியுறுவதால் கா்ப்பத்தைக் கலைக்க அனுதிக்கலாம்’ எனவும் பரிந்துரைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com