தில்லியில் புதிதாக 5,500 பேருக்கு கரோனா

தில்லியில் புதன்கிழமை 5,506 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
தில்லியில் புதிதாக 5,500 பேருக்கு கரோனா

புதுதில்லி: தில்லியில் புதன்கிழமை 5,506 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாகும். இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6.90,568 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் 20 போ் உயிரிழந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, கரோனா பலி எண்ணிக்கை 11.133 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் இரண்டாவது நாளாக தொடா்ந்து 5,000-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை 5,100 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றுவிகிதம் புதன்கிழமை 4.93 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மொத்தம் 90.202 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் 52,477 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 37,724 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுவரை 6.59 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 19.455 ஆக உள்ளது. வீட்டுத்தனிமையில் 10,048 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்3,291-லிருந்து 3,708 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com