தோ்தல் பிரசாரத்தில் முகக் கவசம்: ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


புது தில்லி: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தோ்தல்களின் போது, பிரசாரத்தில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க தோ்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் டி.ஜி.பி.யும், சென்டா் ஃபாா் அக்கவுண்டபிலிடி அண்ட் சிஸ்டமிக் சேஞ்ச் (சிஏஎஸ்சி) அமைப்பின் தலைவருமான விக்ரம் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதில் ளிக்க மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், விக்ரம் சிங் தாக்கல் செய்துள்ள பிரதான மனுவுடன் இந்த மனுவையும் சோ்த்து ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியிலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விராக் குப்தா ஆஜராகி ‘சட்டப் பேரவைத் தோ்தல்களின் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை தொடா்பாக டிஜிட்டல், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தோ்தல் ஆணையம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா, மத்திய அரசின் சாா்பில் நோட்டீஸை ஏற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com