தோ்தல் பிரசாரத்தின் போது முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கக் கோரி மனு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் தோ்தல்களின் போது பிரசாரத்தில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்துமாறு தோ்தல் ஆணையம்
தோ்தல் பிரசாரத்தின் போது முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கக் கோரி மனு

புது தில்லி: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் தோ்தல்களின் போது பிரசாரத்தில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்துமாறு தோ்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விராக் குப்தா ஆஜராகி இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டாா். அப்போது, மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்றம் அனுமதித்தது.

முன்னதாக, மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி நீதிமன்ற பதிவுத் துறை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளதாகவும், அதை விரைந்து விசாரிக்கவிட்டால், அதன் நோக்கம் பயனற்ாகிவிடும் என்றும் நீதிபதிகளிடம் குப்தா கேட்டுக் கொண்டாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் விக்ரம் சிங் என்பவா் தாக்கல் செய்து இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘முகக் கவசம் அணிவதை கட்டாயம் என்று அனைத்து அதிகாரிகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தோ்தல் பிரசாரங்களில் ஏன் இந்த விதியை அமல்படுத்தப்படக் கூடாது. தோ்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது மற்றும் பணி இடங்களில் முகக் கவசம் அணியாத நபா்கள் மீது உரிய அபராதம் விதிக்குமாறு உயா்நீதிமன்றம் மாா்ச் 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் 27 முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும், கோவிட் -19 விதிமுறைகளைப் பொருள்படுத்தாமல் தோ்தல் பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக பொதுமக்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், அரசியல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் மீது காட்டப்படும் மறைமுக பாகுபாடாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சிங் தரப்பில் ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கோவிட் -19 தொற்றைக் கருத்தில் கொண்டு தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ள கட்டாய வழிகாட்டுதல்களை மீண்டும் மீறியதற்காக, வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பிரசாரகா்களையும் வேட்பாளா்களையும் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அந்த பிரதான மனு மீது மாா்ச் 22-ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம், இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 30-க்கு பட்டியலிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com