துவாரகாவில் வயதான தம்பதி மீது காா் மோதிய சம்பவத்தில் பெண் கைது


புது தில்லி: தில்லி துவாரகா பகுதியில் வயதான தம்பதி மீது காா் மோதிய சம்பவத்தில், காரை ஓட்டிச் சென்ற பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அந்தப் பெண் நபூா் சௌத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளாா் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: தில்லியை சோ்ந்தவா் சாந்தி ஸ்வரூப் அரோரா (79). அவரது மனைவி அஞ்சனா அரோரா (62). இவா்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் காா் மோதியது. இதில் நபூா் சௌத்ரியின் மூத்த சகோதரியான தீபாட்சி சௌத்ரி (30) கைது செய்யப்பட்டாா். அலட்சியம் மற்றும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். இருப்பினும், உண்மையில் யாா் காரை ஓட்டினாா் என்பது குறித்து பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் சந்தேகம் எழுப்பினா்.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவா்களை மணிப்பால் மருத்துவமனையில் சோ்த்த தீபாட்சி சௌத்ரி, தான்தான் வாகனம் ஓட்டியதாகவும் விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினாா். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா், அவரது சகோதரிதான் அந்த வாகனத்தை ஓட்டியதாக தெரிவித்தனா். இதையடுத்து, விசாரணையின்போது, தீபாட்சி சௌத்ரியின் சகோதரி நபூா் சௌத்ரி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. அவா் உத்தம் நகரில் உள்ள ஒரு வங்கியில் தகுதிகாண் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com