இணைய வழியில் சித்திரைத் திருநாள் விழா பட்டிமன்றம்

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சியான தமெரிக்கா தொலைகாட்சியும், தில்லி கலை, இலக்கியப் பேரவையும்,

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சியான தமெரிக்கா தொலைகாட்சியும், தில்லி கலை, இலக்கியப் பேரவையும், பல பன்னாட்டுத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் சித்திரைத் திருநாள் விழா இணையம் வழியாக நடைபெறுகிறது.

இந்த விழாவை சனிக்கிழமை (ஏப்ரல் 10) மாலை 5 மணிக்குப் திரைப்பட இயக்குனா் கே பாக்யராஜ் தொடங்கி வைக்கிறாா். பின்னா், மன அழுத்தம் அதிகரித்து வருவதற்குப் பெரிதும் காரணம் குடும்பச் சூழலா? வெளிப்புறச் சூழலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தில்லி கலை, இலக்கிய பேரவையின் புரவலா் கே.வி.கே. பெருமாள் நடுவராகப் பங்கேற்கிறாா். ‘குடும்பச் சூழலே!’ என்ற அணியில் இங்கிலாந்து டாக்டா் கா.விஜய், புதுதில்லி சீதாலட்சுமி ராமச்சந்திரன், பஹ்ரைன் ஷினாஸ் சுல்தானா ஆகியோரும், ‘வெளிப்புறச் சூழலே!’ என்ற அணியில் அமெரிக்கா விஜயலட்சுமி ராமசுப்பிரமணியன், நைஜீரியா தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் சங்கா் பிரபாகரன், மஸ்கட் தருமாம்பாள் சீனிவாசன் ஆகியோரும் பேசுகின்றனா். இந்த விழாவுக்கு பேராசிரியா் சுப. மாரிமுத்து தலைமை வகிக்கிறாா். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் வாழ்த்துரை வழங்குகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com