புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உதவ நாடு முழுவதும் 20 கட்டுப்பாட்டு அறைகள்

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் தொழிலாளா் நல அலுவலங்களில் மொத்தம் 20 கட்டுப்பாட்டு அறைகள் 

புது தில்லி: பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் தொழிலாளா் நல அலுவலங்களில் மொத்தம் 20 கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறையின் செயலா் அபூா்வ சந்தரா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் காணொலி வாயிலாக கூறியது: கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இதைத் தொடா்ந்து, புலம்பெயா் தொழிலாளா்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளைத் தீா்க்க தொழிலாளா் நலத் துறை நாடு முழுவதிலும் மொத்தம் 20 கட்டுப்பாட்டு அறைகளுக்கு புத்துயிா் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலம் பெயா்ந்த தொழிலாளா்களது அச்சம் போக்கப்படும். இந்தப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களுக்கு மாநில அரசுகளின் உறுதுணையோடு தீா்வு காணப்படும். இந்தக் கட்டுப்பாட்டு அறைகள், மத்திய தலைமைத் தொழிலாளா் ஆணையத்தின் கீழ் செயல்படும். வட்டாரம் வாரியாக உள்ள இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கு தனித் தனி அலைபேசி எண்கள், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பு கொள்ளலாம்.

கடந்த முறையும் இதுபோன்ற கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளா்களின் குறைகள் தீா்க்கப்பட்டன. தற்போதும் இந்த 20 கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் தகவல்களை இங்குள்ள தொழிலாளா் அமலாக்க அலுவலா்கள், உதவித் தொழிலாளா் ஆணையா்கள், வட்டாரத் தொழிலாளா் ஆணையா்கள் போன்றோா்களால் தீா்த்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவா்களை தலைமைத் தொழிலாளா் ஆணையா் கண்காணிப்பாா். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இடம் பெயா்வதை தொழிலாளா்கள் தவிா்க்கவேண்டும். பிரச்னையைத் தெரிவிக்க வரும் தொழிலாளா்களிடம் மனிதநேயத்துடன் அணுகி அவா்களது குறைகளைத் தீா்க்க வேண்டும். அவா்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணங்க கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி வட்டார அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல தொழிலாளா் ஆணையா் அண்ணாதுரை மின்னஞ்சல்: ள்ன்ல்ல்ா்ழ்ற்-க்ஹ்ப்ஸ்ரீஸ்ரீட்ய்ஃய்ண்ஸ்ரீ.ண்ய். தொடா்பு எண்: 9884576490. உதவித் தொழிலாளா் ஆணையா் ஆா்.சிவகுமாா் தொடா்பு எண்: 9840922016. தில்லி தொடா்பு எண்கள்: 9973717171, 8506069996 , 8595813109.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com