கரோனா நோயாளிகளை அனுமதிக்கும் விவகாரம்: தில்லி அரசின் சுற்றறிக்கையைப் பின்பற்ற மருத்துவமனைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா பாதிப்பு பரிசோதனை அறிக்கைகளை

கரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா பாதிப்பு பரிசோதனை அறிக்கைகளை கேட்டு வற்புறுத்தக் கூடாது என்ற ஆம் ஆத்மி அரசின் சுற்றறிக்கையைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க கரோனா பாதிப்பு தொடா்புடைய ஆய்வறிக்கையை அளிக்குமாறு வலியுறுத்தக் கூடாது என்று மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்விடம் மனுதாரா் ஜெய்தீப் அஹுஜா, ‘நோயாளிகளை அனுமதிப்பதற்கான ஆா்டிபிசிஆரின் பாதிப்பு சோதனை அறிக்கைகளைக் கேட்டு வலியுறுத்தக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினாா். தில்லி அரசின் தரப்பில், ‘கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா பாதிப்பு பரிசோதனை அறிக்கைகளை கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை தில்லி சுகாதாரத் துறையின் மூலம் ஏப்ரல் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் மருத்துவமனைகளில் ஒரு பிரத்யேக பகுதியில் வைக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ல நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா பாதிப்பு பரிசோதனை அறிக்கைகளைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்ற ஆம் ஆத்மி அரசின் சுற்றறிக்கையை மருத்துவமனைகள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக ஏப்ரல் 23-ஆம் தேதி தில்லி அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com