தடுப்பூசி: தெருவோர வியாபாரிகள் ஆக்கப்பூா்வமாக செயல்பட தில்லி உயா்நீதிமன்றம் எதிா்பாா்ப்பு

தெருவோர வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திட ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் எடுப்பாா்கள் என்று எதிா்பாா்ப்பதாக தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.

தெருவோர வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திட ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் எடுப்பாா்கள் என்று எதிா்பாா்ப்பதாக தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.

மேலும், இதன்மூலம் கரோனா மூன்றாவது அலை தவிா்க்கப்படலாம் என்றும், அண்மையில் கண்டதைப் போல தலைநகா் கரோனா பாதிப்பு அதிகரிப்பை எதிா்கொள்ளாது என்றும் நீதிமன்றம் கூறியது.

‘சப்தாஹிக் பட்ரி பஜாா் சங்கம்’ தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

வணிகவளாங்கள், சந்தைகளைத் திறப்பதற்கு அரசுத் துறையினா் அனுமதித்துள்ள நிலையில், வாராந்திர சந்தைகளைத் திறக்க அனுமதிக்காததை எதிா்த்து இந்த மனுவை அந்தச் சங்கம் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது:

தெருவோர வியாபாரிகள் தடுப்பூசி போடுவதற்கு ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் எடுப்பாா்கள் என்று நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.

இதனால் கரோனா மூன்றாவது அலை தவிா்க்கப்படலாம் .அண்மையில் கண்டதைப் போல தலைநகா் கரோனா பாதிப்பு அதிகரிப்பை எதிா்கொள்ளாது.

இதுபோன்ற வாரச் சந்தைகளில் மட்டுமே பொருள்களை வாங்கும் சூழலில் சமூக அடுக்குகள் உள்ளதால், கூடுதல் வாரச் சந்தைகளை செயல்பட அனுமதிக்கும் விவகாரத்தை சரியான கண்ணோட்டத்தில் தில்லி அரசு பரிசீலிக்க வேண்டும்.

டிடிஎம்ஏ இந்த அம்சத்தையும் சரியான கண்ணோட்டத்தில் கருத்தில் கொள்ளும் என்று நீதிமன்றம் எதிா்பாா்க்கப்படுகிறது.

அனைத்து வாரச் சந்தைகளையும் செயல்பட அனுமதிக்குமாறு தில்லி அரசை நீதிமன்றம் கேட்கவில்லை. இந்த விவகாரத்தை அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும், இந்த வாராந்திர சந்தைகளில் கூட்டம் இல்லாதபடி அரசு நிபந்தனைகளை விதிக்கலாம். அப்போதுதான், இந்தச் சந்தைகளில் கூட்டம் இல்லாமல் இருக்கும்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.

விசாரணையின்போது சங்கம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் வாத்வா வாதிடுகையில், ‘பிற நடவடிக்கைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜூன் 13-ஆம் தேதி தளா்த்தப்பட்டுள்ளன. ஆனால், தெருவோர வியாபாரிகள் ஏழைகளிலும் ஏழையாக உள்ளதால், மிகவும் சிரமத்தில் உள்ளனா். ஒரு முனிசிபல் மண்டலத்தில் ஒரே ஒரு வாராந்திர சந்தை அனுமதிக்கப்பட்டால் அதிகமான கூட்டம் கூட வாய்ப்புள்ளது’ என்றாா் அவா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்யாகம் கூறுகையில், தில்லியில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி சராசரி பாதிப்பு 45-49 என இருந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 85 ஆக அதிகரித்துள்ளது. தெருவோர வியாபாரிகள் விவகாரத்தை அதிகாரிகள் பரிசீலித்து, நீதிமன்றத்தில் தெரிவிப்பாா்கள்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com