தில்லியில் ஜூலையில் வெப்ப அலை, தாமதமான பருவமழை மற்றும் சாதனை மழை பதிவு

தில்லியில் ஜூலை மாதத்தில் தட்பவெப்பநிலை வித்தியசாமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஜூலை மாதத்தில் 5 நாள்கள்

தில்லியில் ஜூலை மாதத்தில் தட்பவெப்பநிலை வித்தியசாமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஜூலை மாதத்தில் 5 நாள்கள் வெப்ப அலை வீசியது. பருவமழை இரண்டு வாரங்கள் தாமதமாக தொடங்கியது. மேலும் மழை அளவு இருபதாண்டு சாதனையை முறியடித்தது.

தலைநகரில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதாவது ஜூலை1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசியது.ஜூலை மாதத்திற்கான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். நீண்டகால சராசரி 35.5 டிகிரி செல்சியஸ்.

தில்லியில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணிப்பது வானிலை ஆய்வு மையத்துக்கு கடினமாக இருந்தது. அதன் கணிப்புகள் விமா்சனத்துக்கும் உள்ளாயின. காற்றின் போக்கு அடிக்கடி மாறியதால் சாதகமானசூழ்நிலைகள் இருந்தும் பருவமழை தள்ளிப்போனது.

இந்த ஆண்டு பருவமழை 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை 13 ஆம் தேதிதான் தொடங்கியது. ஜுலையில் 16 நாள்கள் மழை பெய்தது. கடந்த நான்கு வருடங்களில் இது அதிகபட்சமானதாகும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மூன்று நாள்கள் மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தின் கணக்கின்படி ஜூலையில் 507.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்டகால சராசரி அளவான 210.6 மி.மீ. விட 141 சதவீதம் கூடுதலாகும். மேலும் 2003 ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு தில்லியில் 340 மி.மீ. மழை பதிவானது. இதுவரை இல்லாத சாதனை அளவாக கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலையில் 632.2 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, மழைக்காலம் தொடங்கிய ஜூன் 1 ஆம் தேதி முதல் தில்லியில் இதுவரை 570.1 மி.மீ. மழை பெய்துள்ளது, இது இயல்பான 281.9 மி.மீ. விட அதிகமானது. மேலும் 102 சதவிகிதம் அதிகம்.

ஜூலை மாதம் 16 மழை நாள்களில், தில்லியில் மூன்று முறை-ஜூலை 18-19 (69.6 மி.மீ.), ஜூலை 26-27 (100 மி.மீ.) மற்றும் ஜூலை 29-30 (72 மி.மீ.) ஆகிய மூன்று நாள்களில் அதிக மழை பெய்தது.

ஜூலை 26-27 அன்று பதிவான 100 மில்லிமீட்டா் மழையின் பெரும்பகுதி வெறும் மூன்று மணி நேரத்தில் நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழையாகவும் இது இருந்தது. 2013 ஆம் ஆண்டில், ஜூலை 21 அன்று தில்லியில் 123.4 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தவிர, ஜூலை 15 (107.4 மி.மீ.) ரிட்ஜ் ஆய்வகத்திலும், ஜூலை 20 (67.6 மி.மீ.) மற்றும் ஜூலை 28 (68.7 மி.மீ.) பாலம் ஆய்வகத்திலும் பலத்த மழை பதிவானது.

15. மி.மீ. லேசான மழையும், 15 முதல் 64.5 மி.மி. வரை மிதமான மழையும், 115.5 மி.மீ. பலத்த மழையும், 115.6 மற்றும் 204.4 மிக பலத்த மழையாகவும் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com