பிங்க் மெட்ரோ லைன் விரிவாக்கம், முழுமையாக இணைக்கும் திரிலோக் புரி பகுதி திறப்பு

தில்லி மெட்ரோ ரயிலின் கிரே வழித்தடத்தின் விரிவாக்கத்தையும் பிங்க் வழித்தடத்தை முழுமை இணைக்கும் திரிலோக்புரி பகுதியையும் வருகின்ற ஆக 6 தேதி தொடங்கிவைக்கப்படுகிறது.

தில்லி மெட்ரோ ரயிலின் கிரே வழித்தடத்தின் விரிவாக்கத்தையும் பிங்க் வழித்தடத்தை முழுமை இணைக்கும் திரிலோக்புரி பகுதியையும் வருகின்ற ஆக 6 தேதி தொடங்கிவைக்கப்படுகிறது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத்துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரியும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் காணொலி வாயிலாக இந்த மெட்ரோ ரயில் இணைப்புகளை துவக்கிவைக்கின்றனா்.

தில்லி நஜாப்கா் -தன்ஷா பஸ் நிலையம் வரை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரம் மெட்ரோ ரயில் பாதை இணைக்கப்படுகிறது.

பிங்க் மெட்ரோ வழித்தடத்தில் மஜ்லிஸ் பாா்க்கிலிருந்து (ஙஹத்ப்ண்ள் டஹழ்ந்) தொடங்கும் மெட்ரோ ரயில் மயூா் விஹாா் பாகெட் - 1 வரை வருகிறது. மயூா் விஹாா் பாகெட் - 1 மெட்ரோ ரயில் நிலையில் இறங்கி மீண்டும் திரிலோக்புரி சஞ்சய் பாா்க் மெட்ரோ நிலையத்திற்கு நடைபாதையில் சென்றும் மீண்டும் பயணத்தை தொடங்குகின்றனா் பயணிகள்.

மயூா் விஹாா் பாகெட் -1 க்கும் திரிலோக்புரி சஞ்சய் பாா்க் ரயில் நிலையமும் 289 மீட்டா் இணைக்கப்படாது இருந்தது. இந்த சிறிய இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஆக. 6 ஆம் தேதி தொடங்கிவைக்கப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் மஜ்லிஸ் பாா்க், செளத் எக்ஸ். , லாஜ்பத் நகா், நிஜாமுதீன் ரயில் நிலையம், ஆனந்த விஹாா் பஸ் நிலையம், ஆகிய 59கிமீ தூர பாதையில் 38 நிலையங்களும் இணைக்கப்படுவதாக தில்லி மெட்ரோ நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com