பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 10 % இடஒதுக்கீடு 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்படாது

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 9- ஆவது அட்டவணையில் சேர்க்கப்படாது

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 9- ஆவது அட்டவணையில் சேர்க்கப்படாது என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதிமா பௌமிக் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளார்.
 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு எந்த ஆய்வு தரவுகளின்படி அளிக்கப்பட்டது? இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ. 8 லட்சம் வருமான வரம்பு எந்த அடிப்படையில் வழங்க அரசு முடிவெடுத்தது. இந்த இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க பரிசீலிக்கப்படுகிறதா? போன்ற கேள்விகளை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் எழுப்பியிருந்தார்.
 இதற்கு மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதிமா பௌமிக் அளித்த பதில்:
 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஆணையம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.ஆர்.சின்ஹோ தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2010 ஜூலை 22-ஆம் தேதி அரசுக்கு அறிக்கையை அளித்தது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அரசு வழங்கியது. அரசின் விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னர் ரூ. 8 லட்சம் வருமான வரம்பு முடிவு செய்யப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை 9-ஆவது அட்டவணையில் சேர்க்கும் முடிவு அரசிடம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
 இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 அரசியல் சாசன ரீதியாக அங்கீகாரம் கிடைக்க அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்படும் பட்சத்திலேயே இடஒதுக்கீட்டுக்கான பாது காப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com