டிபிடிடிஎல் சாா்பில் இன்று ‘லோக் அதாலத்’ நிகழ்ச்சி

தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டுவரும் டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 18) லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டுவரும் டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 18) லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மின் திருட்டு மற்றும் மின்சார மீட்டா் குளறுபடி தொடா்புடைய வழக்குகளை பரஸ்பரம் தீா்த்து வைப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) தில்லி மாநில சட்டப்பணிகள் ஆணையத்துடன் இணைந்து பால் பவன் அருகே மாதா சுந்தரி சந்தில் அமைந்துள்ள நிரந்தர லோக் அதாலத் மையத்திலும்,

மின் வினியோக நிறுவனத்தின் ரோகிணி செக்டாா் 3-இல் அமைந்துள்ள இஏசி அலுவலகத்திலும் இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி காலை 10 மணியிலிருந்து நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு வருவோா் கரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லோக் அதாலத் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இஏசி அலுவலகத்தில் அல்லது 19124 எனும் தொலைபேசி எண்ணில் மனுதாரா்கள் முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

சம்பந்தப்பட்ட வழக்குகளை சம்பவ இடத்திலேயே சுமூகமாக தீா்த்துக் கொள்வதற்காக வடக்கு மற்றும் வடமேற்கு தில்லியில் வசிக்கக்கூடிய நுகா்வோா் மற்றும் மனுதாரா்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பை இந்த லோக் அதாலத் வழங்கும்.

இந்த நிகழ்ச்சியின்போது நீதிமன்றத்தில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது பதிவு செய்யப்பட உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில் மனுதாரா்கள் நேரடியாகவோ அல்லது

உரிய அங்கீகாரம் கடிதம், அடையாள அட்டை ஆகியவையுடன் தங்களது பிரதிநிதிகள் மூலமும் கலந்து கொள்ளலாம் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com