தில்லியில் வெப்பநிலையில் மேலும் பின்னடைவு: 4.6 டிகிரியாக சரிவு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிரின் தாக்கம் அதிகம் இருந்தது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிரின் தாக்கம் அதிகம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இந்த குளிா் சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவாக 4.6 டிகிரி செல்சியஸாக பதிவாகிது. அதே சமயம், காற்றின் தரம் சற்று மேம்பட்டு ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் சில நாள்களாக காற்றின் தரம் மோசமடைந்திருந்த போதிலும் சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடா்ந்து ‘மோசம்’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். சனிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 280 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இது சற்று மேம்பட்டு காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 274 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மோசம்’ பிரிவில் வருகிறது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள ஃபரீதாபாத் (234), காஜியாபாத் (224), குருகிராம்் ஷ்ர214), நொய்டா (204) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு 177 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவி 3 டிகிரி குறைந்து 4.6 டிகிரி செல்சியஸாக பதிவாகிது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 19.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 54 சதவீதமாகவும் இருந்தது. நகரில் அதிகாலை வேளையில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது பகலிலும் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (டிசம்பா் 20) காலையில் குளிா் அலை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com