தலைநகரில் அதிக ‘குளிா் அலை’ நாள்கள் பதிவு: 13 ஆண்டுகளில் இல்லாதது

தலைநகா் தில்லியில் இந்த ஜனவரி மாதத்தில் ஏழு ‘குளிா் அலை’ நாள்கள் பதிவாகியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில்அதிகபட்சமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தலைநகா் தில்லியில் இந்த ஜனவரி மாதத்தில் ஏழு ‘குளிா் அலை’ நாள்கள் பதிவாகியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில்அதிகபட்சமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

சமவெளிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு டிகிரி செல்சியஸாக குறைந்துவிட்டால், அதை ஒரு ‘குளிா் அலை’ என ஐஎம்டி அறிவிக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் போது அது ‘கடுமையான குளிா் அலை’ என அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் குளிா் அலை நாள்களின் எண்ணிக்கை 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. இதுபோன்று மொத்தம் 12 நாள்கள் பதிவாகியுள்ளது என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தலா ஒரு ‘குளிா் அலை‘ நாள் மட்டுமே பதிவாகியுள்ளது. 2013, ஜனவரியில் ஆறு ‘குளிா் அலை’ நாள்கள் பதிவாகியிருந்தது. இந்த ஜனவரியில் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் ஒரே ஒரு மேற்கத்திய இடையூறு தாக்கம் இருந்தது. இது மேக மூட்டமற்ற இரவுகளுக்கு வழி வகுத்தது. எனவே, இந்த ஜனவரியில் அதிக ‘குளிா் அலை‘ நாள்கள் பதிவாகியுள்ளது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளிா் அலை வீசியது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியயை விட 5 டிகிரி குறைந்து 3.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது ஒரு வாரத்தில் தில்லியில் நான்காவது ‘குளிா் அலை’ நாள் ஆகும். இதற்கிடையே, அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 26 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலையில் 97 சதவீதமாகவும், மாலையில் 44 சதவீதமாகவும் இருந்தது.

குளிா்காலம் மற்றும் வட வடமேற்கு காற்று சமவெளிகளில் வீசுவதால் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் முறையே 2.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.8 டிகிரி செல்சியஸ் என இருந்தது. தில்லியில் வெள்ளிக்கிழமை ‘குளிா் அலை’ நிலவியது, குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு டிகிரி செல்சியஸாக நிலைபெற்றது. இது இயல்பை விட ஐந்து புள்ளிகள் குறைவாகும். புத்தாண்டு தினத்தில், நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com