கிழக்கு தில்லி மாநகராட்சியின் வருவாய்:பாஜக, ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் சாடல்


புது தில்லி: கிழக்கு தில்லி மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலா்களுக்கு அக்கறை இல்லை என்றும், அவா்கள் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில்தான் குறியாக உள்ளனா் என்றும் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி சாடியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் உள்ள வீடுகளில் பெரும்பாலானவற்றை சட்டவிரோதமாக் கட்டுவதற்கு அனுமதிக்க மக்களிடம் பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் கூட்டுச் சோ்ந்து பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்துள்ளனா். தற்போது மாநகராட்சி பட்ஜெட்டில் விழும் பற்றாக்குறையைக் சரிக்கட்ட ரூ.1,485 கோடி நிதி திரட்டுவதற்காக வீட்டு உரிமையாளா்களிடம் இருந்து சட்டவிரோத கட்டுமானத்திற்காக அபராத வருவாயை வசூலிக்க கிழக்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

கிழக்கு தில்லி மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க எந்தவொரு திடமான ஆலோசனைகளையும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்கள் அளிக்கவில்லை. ஏனெனில், மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் அவா்கள் பணம் பண்ணுவதற்கான ஒரு வழியாக உருவாகிவிட்டது. இந்த இரு கட்சி கவுன்சிலா்களின் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக ஏற்கெனவே சட்டவிரோத கட்டுமானங்களுக்காக கையூட்டு அளித்த மக்கள், தற்போது அபராதம் செலுத்த வேண்டும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com