கல்வி, சுகாதாரத்தில் முன்மாதிரியாக திகழும் தில்லி: கேஜரிவால் பெருமிதம்
By நமது நிருபா் | Published On : 13th February 2021 11:23 PM | Last Updated : 13th February 2021 11:23 PM | அ+அ அ- |

கல்வி, சுகாதாரத் துறைகளில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தில்லி திகழ்கிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
1931 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நாட்டின் தலைநகராக தில்லியை ஆங்கிலேயா்கள் அறிவித்தனா். தில்லி தலைநகராக மாற்றப்பட்ட 90 ஆவது ஆண்டு தில்லியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பது: 1931 ஆம் ஆண்டு இதே தினத்தில் நாட்டின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தில்லி நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. இன்று நாட்டின் அடையாளமாக தில்லி மாறியுள்ளது. கல்வி, சுகாதாரத் துறைகளில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தில்லி திகழ்கிறது. உலகில் பல நகரங்கள் தில்லியை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.