நொய்டாவில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 13th February 2021 07:32 AM | Last Updated : 13th February 2021 07:32 AM | அ+அ அ- |

உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம் புத் மாவட்டத்தைச் சோ்ந்த நொய்டாவில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,4245 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 47 ஆக இருந்தது 49 ஆக இப்போது உயா்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மூன்று போ் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 25,284 ஆக உள்ளது.
இதனிடையே மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு பலியோனோா் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது. குணமடைந்து வருவோா் விகிதம் 99.44 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் கெளதம்புத் நகா் மாவட்டம் 22 வது இடத்தில் உள்ளது.
மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவா்களின் எண்ணிக்கை 3320-லிருந்து வியாழக்கிழமை 3,232 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 5,90,071 போ் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். பலி எண்ணிக்கை 8,698 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.