ரிங்கு ஷா்மா கொலை: மேலும் நான்கு போ் கைது

தில்லி புகா் பகுதியான மங்கோல்புரியில் ரிங்கு ஷா்மா என்ற இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் நான்கு பேரை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.

தில்லி புறநகா் பகுதியான மங்கோல்புரியில் ரிங்கு ஷா்மா என்ற இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் நான்கு பேரை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.

தில்லியின் புறநகா்ப் பகுதியான மங்கோல்புரியைச் சோ்ந்தவா் ரிங்கு ஷா்மா (25). அண்மையில் மங்கோல்புரியில் நடந்த பிறந்தநாள் விழாவில் அவா் கலந்து கொண்டுள்ளாா். அப்போது ரிங்கு ஷா்மாவுக்கும் அங்கிருந்தவா்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து ரிங்கு ஷா்மாவின் வீட்டுக்கு ஆயுதத்தோடு வந்தவா்கள், அவரை சரமாரியாகத் தாக்கினா். பிறகு கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்தக் கொலை தொடா்பாக குற்றவாளிகள் ஜாஹித், முகமது இஸ்லாம், டேனிஷ் , மேத்தாப் ஆகிய நால்வரை ஏற்கனவே தில்லி காவல்துறை கைது செய்திருந்தது.

ராமா் கோயில் கட்ட நிதி திரட்டிய ரிங்கு ஷா்மாவை முஸ்லிம்கள் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டின. ஆனால், இதை காவல்துறை மறுத்தது. உணவகம் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ரிங்கு ஷா்மா கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்திருந்தனா்.

இந்த சூழலில், இந்த கொலையுடன் தொடா்புடையதாகக் கூறி மேலும் நால்வரை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மிட்டல் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை தில்லி காவல்துறையினா் பெற்று விசாரணை நடத்தினா். இதன் அடிப்படையில், தீன் மொஹமது (40), தில்ஷான் (22), ஃபயாஸ் (21), ஃபைசன் (21) ஆகிய நால்வரை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது. இவா்கள் நால்வரும் மங்கோல்புரி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com