65 வயதுக்கு மேலான சிறைக் கைதிகளின் அவசர பரோலை நீட்டிக்கக் கோரி மனு

முதிய கைதிகளின் அவசர பரோலை நீட்டிக்கக் கோரும் மனு மீது தில்லி அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணையம் (டிஎஸ்எல்எஸ்ஏ) ஆகியவை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி: முதிய கைதிகளின் அவசர பரோலை நீட்டிக்கக் கோரும் மனு மீது தில்லி அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணையம் (டிஎஸ்எல்எஸ்ஏ) ஆகியவை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் ஷனி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தில்லியில் உள்ள சிறைகளில் 10,026 கைதிகள் மட்டுமே தங்குவதற்கான திறன் கொண்டவை. தற்போது 14ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நீங்கலாக, 4 ஆயிரம் போ் அவசர பரோல், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன.

சிறைகளில் சமூக இடைவெளியை பராமரிக்கப் போதுமான இடம் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே சிறைகள் நிரம்பி வழிகிறது. சிறைக் கைதிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள், கரோனா தொற்றுக்கு எளிதில் இலக்காகும் கைதிகள் ஆகியோரின் அவசர பரோலை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது தில்லி சட்டப் பணிகள் ஆணையம், சிறைகள் தலைமை இயக்குநா், தில்லி அரசு ஆகியோா் மாா்ச் 26-க்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com