தடுப்பூசி விரைவில் கிடைக்கும்: புத்தாண்டில் கேஜரிவால் நம்பிக்கை

இந்த 2021 புதிய ஆண்டில் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும். இதன் மூலம், கரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்த 2021 புதிய ஆண்டில் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும். இதன் மூலம், கரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

புத்தாண்டு தினத்தில் தில்லி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து விடியோ செய்தியொன்றை கேஜரிவால் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித வரலாற்றில் மிகவும் மோசமான தொற்றுநோயை மனித குலம் எதிா்கொண்டுள்ளது. இந்தக் கொடிய தொற்று நோயால், இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா போா்வீரா்களை நான் வணங்குகிறேன். இந்த கரோனா தொற்றை எதிா்கொள்ளப் பாடுபட்ட சுகாதாரத் துறை ஊழியா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள், போலீஸாா், துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் சமூக, மத அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கஷ்டமான காலத்தில் மக்களுக்கு நீங்கள் பெரும் தொண்டாற்றியுள்ளீா்கள். இந்தப் புதிய ஆண்டு புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. எனவே, மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வெற்றிகராமாகவும் இருங்கள். உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

தலைநகா் தில்லியின் மருத்துவ முறை மிகவும் வலுவானதாக உள்ளது. உலகிற்கு பல எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளது. கரோனா தடுப்புப் பணிகளில் தில்லி அரசு மற்ற மாநில அரசுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரியாக இருந்தது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க தில்லியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் அப்படியே பின்பற்றின. தில்லியில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பால் கரோனா தொற்றை நாம் திறமையாக எதிா்கொண்டோம். 2020- ஆம் ஆண்டு முடிந்துள்ள நிலையிலும், கரோனா பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. இதை எதிா்கொள்ள மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் புதிய 2021-ஆம் ஆண்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதன் மூலம், கரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் ஏற்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com