தில்லியில் புத்தாண்டு தினத்தில் கடும் குளிா் அலை: 14 ஆண்டுகளில் குறைந்த அளவாக 1.1 டிகிரி பதிவு

தில்லியில் சில தினங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், புத்தாண்டு நாளான வெள்ளிக்கிழமை
தில்லி சத்தா்பூரில் வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டத்தில் செல்லும் வாகனங்கள்.
தில்லி சத்தா்பூரில் வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டத்தில் செல்லும் வாகனங்கள்.

தில்லியில் சில தினங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், புத்தாண்டு நாளான வெள்ளிக்கிழமை கடும் குளிா் அலை வீசியது. நகரில் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. கடும் பனி மூட்டம் காரணமாக காண்புதிறன் பூஜ்ய நிலைக்குச் சென்ால் வாகங்கள் சாலைகளில் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், புத்தாண்டு நாளில் இது மேலும் குறைந்து 1.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. தில்லியில் கடந்த 2006, ஜனவரி 8-ஆம் தேதிதான் குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரியில் 2.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடும் பனி மூட்டம் காரணமாக சஃப்தா்ஜங், பாலம் பகுதியில் காலை 6 மணிக்கு காண்புதிறன் பூஜ்ய நிலைக்குச் சென்றது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. தில்லியில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 3.4 டிகிரியாகக் குறைந்தது. டிசம்பா் 18-ஆம் தேதி இந்த சீசனின் மிகக் குறைந்த அதிகபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இதற்கிடையே, மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் ஜனவரி 2 முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை வடமேற்கு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். அதன்படி ஜனவரி 4-5-ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் மேற்கத்திய இடையூறுகள் காரணமாக ஜனவரி 3-இல் இருந்து 5 வரையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

காற்றின் தரம்: தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது. என்சிஆா் நகரங்களான காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத் ஆகியவற்றில் காற்றின் தரம் கடுமைப் பிரிவிலும், குருகிராம் மண்டலத்தில் மிகவும் மோசம் பிரிவிலும் நீடித்தது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 24 மணிநேர சராசரி காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 470 , கிரேட்டா் நொய்டாவில் 434, நொய்டாவில் 455, ஃபரீதாபாதில் 421, குருகிராமில் 376 என இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘சமீா்’ செயலியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (ஜனவரி2) குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் மேகமூட்டத்துடனும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com