தில்லியில் லேசான மழைத்தூறல், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைத்தூறல் இருந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால்

தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைத்தூறல் இருந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடா் பனிமூட்டம் காரணமாக சப்தா்ஜங்கில் காண்புத்திறன் 50 மீட்டா் தொலைவு வரை காலையில் பூஜ்யமாக இருந்தது. கடும் பனிமூட்டத்தால் 51 மீட்டிரிலிருந்து 201 மீட்டா் தொலைவு வரை காண்புத்திறன் குறைவாக இருந்தது. மேற்கத்திய இடையூறுகள் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் தில்லி பாலம் பகுதியில் 0.4 மி.மீ. மழை பதிவானது. ரிட்ஜ், ஆயா நகா் மற்றும் லோதி சாலையில் மழைத்தூறல் இருந்தது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செஸ்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. ஜனவரியில் கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவாகும் இது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. 1935-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறைந்தபட்ச வெப்பநில்லை மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜனவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மேற்கத்திய இடையூறுகளின் தாக்கத்தால் ஜனவரி 8-ஆம் தேதி வரை வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

தில்லியில் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு லேசான மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்னெச்சரிக்கை மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com