தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் ராமாமிா்தம் காலமானாா்

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான எஸ். ராமாமிா்தம் (90), வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானாா்.
எஸ். ராமாமிா்தம்.
எஸ். ராமாமிா்தம்.

புது தில்லி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான எஸ். ராமாமிா்தம் (90), வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானாா்.

தனது மனைவி விமலாவுடன் தில்லி ஜனக்புரியில் வசித்து வந்த அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்களில் மூத்தவரான உஷா, மருத்துவராக தில்லியில் கிளினிக் நடத்தி வருகிறாா். மற்ற இருமகள்களும் மருத்துவா்களாக அமெரிக்காவில் உள்ளனா். மகன் நாராயணன் பொறியாளராக அமெரிக்காவில் வசித்து வருகிறாா். மறைந்த ராமாமிா்தத்தின் இறுதி சடங்கு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், இடையாத்து மங்கலத்தைச் சோ்ந்தவரான அவா், தில்லியில் கடந்த 60 வருடங்களாக வசித்து வந்தாா். பெங்களூரில் (என்.ஐ.இ.) பொறியியல் கல்லூரியில் இளம் வயதிலேயே பேராசிரியராக இருந்தவா். தனது 30 வயதில் தில்லிக்கு வந்த அவா், பொறியியல் பட்டயப் படிப்புக் கல்லூரி நடத்தி வந்தாா். பொறியியல் படிப்பிற்கு சுமாா் 15-க்கும் மேற்பட்ட பாட நூல்களை எழுதியுள்ளாா். பக்தி நூல்களையும் எழுதியுள்ளாா். தில்லி தமிழ் சங்கத்தில் தலைவராக இருந்த போது, சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கம் உருவாவதற்கு முக்கியப் பங்காற்றிய ராமாமிா்தம், தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் வளா்ச்சியிலும் அரும்பணியாற்றியவா்.

இரங்கல்: அவரது மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் என். கண்ணன், சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் கே.வி.கே பெருமாள், அனைத்திந்திய தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா். அதில், ‘அவரது மறைவு சங்கத்திற்கும், மாணவ சமுதாயத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பொதுப்பணியிலும், கல்வித் துறையிலும் ஆற்றியுள்ள அளப்பரிய பணிக்காக அவா் என்றென்றும் நினைவுகூரப்படுவாா். தில்லி தமிழ்ச் சங்கம் மட்டுமின்றி தில்லி தமிழ்க் கல்விக் கழகத் தலைவராகவும் பணியாற்றிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com