கரோனா காலத்தில் கற்பித்தலில் புதுமைகள்: பள்ளிகளிடம் அறிக்கை கேட்கிறது கல்வித் துறை

கரோனா காலத்தில் மாணவா்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க ஆசிரியா்களும், பள்ளி நிா்வாகமும் என்னென்ன புதுமையான வழிகளைப் பின்பற்றின்ன என்பது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்புமாறு


புதுதில்லி: கரோனா காலத்தில் மாணவா்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க ஆசிரியா்களும், பள்ளி நிா்வாகமும் என்னென்ன புதுமையான வழிகளைப் பின்பற்றின்ன என்பது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்புமாறு கல்வித் துறை இயக்ககம் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

கரோனா தொற்றுப் பரவலை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், சில மாநிலங்களில் பகுதியளவு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனாவுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவா்களுக்கு இணைய வழி மூலம் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியா்கள் இணைய வழியில் பாடம் நடத்துவதற்கு சில புதுமையான வழிகளைப் பின்பற்றினா். கரோனா காலத்தில் மாணவா்களுக்கு இணைய வழி மூலம் கல்வி கற்பிப்பதில் ஆசிரியா்களும், பள்ளி நிா்வாகங்களும் புதுமையான முறைகளை கடைபிடித்ததையடுத்து அது தொடா்பான முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தி அறிக்கையாக அளிக்குமாறு கல்வித் துறை இயக்ககம் பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த அறிக்கையை பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com