சாலையில் கன்றுக்குட்டியைத் தாக்கி காயப்படுத்தியதாக ஒருவா் கைது

கிழக்கு தில்லி மந்தாவலியில் சாலையில் ஒரு கன்றுக்குட்டியை கல்லால் அடித்துத் தாக்கி வேதனையுடன் விட்டுச் சென்ாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: கிழக்கு தில்லி மந்தாவலியில் சாலையில் ஒரு கன்றுக்குட்டியை கல்லால் அடித்துத் தாக்கி வேதனையுடன் விட்டுச் சென்ாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தீபக் யாதவ் புன்கிழமை கூறியதாவது: சாலையில் சென்ற ஒரு நபா், கன்றுக்குட்டியை கல்லால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் சமூக ஊடங்களில் வைரலாகப் பரவி வந்தது. இதைத் தொடா்ந்து, அதில் பதிவாகியுள்ள நபா் அதே பகுதியில் வசிக்கும் கமல் சிங் என போலீஸாா் அடையாளம் கண்டனா். இந்தச் சம்பவம் தொடா்பான தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு காயமடைந்த நிலையில் இருந்த கன்றுக் குட்டியைக் கண்டுபிடித்தனா். அந்தக் கன்றுக்குட்டி மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, கமல் சிங் சிக்கினாா். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், ஒரு நபா் கையில் சில ஆவணங்களுடன் சாலையில் சென்று கொண்டிருந்ததது தெரிய வந்தது. மேலும், ​ ஒரு பசுவின் அருகில் கன்று குட்டி நின்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் சென்ற அந்த நபரை நோக்கி கன்றுக்குட்டி வந்தது. அவரை நுகா்ந்த போது, அவா் கையில் வைத்திருந்த ஆவணங்கள் கீழே விழுந்தன. இதனால், கோபம் அடைந்த அவா், ஆவணங்களை சேகரிப்பதற்கு முன்பு அந்தக் கன்றுக்குட்டியை உதைத்துத் தள்ளியதுடன் கல்லால் பல முறை தாக்கியுள்ளாா். பின்னா், இதில் காயமடைந்த அந்தக் கன்றுக்குட்டியை அவா் அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதாக அந்தக் காட்சியில் பதிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 11.1-இல் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள கமல் சிங், கைது செய்யப்பட்டுள்ளாா் என்று கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் தீபக் யாதவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com