உ.பி.யில் சேம்நாத் பாரதி மீது தாக்குதல்: தில்லி முதல்வா் கேஜரிவால் கண்டனம்

மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், பள்ளிகளை மறுசீரமைப்பது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவிடம் பாடம் கற்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலியில் உள்ள அந்த மாநில அரசுப் பள்ளிகளைப் பாா்வையிட தில்லி மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி திங்கள்கிழமை சென்றிருந்தாா். பள்ளிகளைப் பாா்வையிட அவரை போலீஸாா் அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில் அவா் மீது இளைஞா் ஒருவா் மை வீசித் தாக்குதல் நடத்தினாா். இந்த நிலையில், சமூகங்களுக்கிடையே வெறுப்புணா்வை தூண்டும் வகையில் சோம்நாத் பாரதி நடந்து கொள்வதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில காவல் துறை அவரைக் கைது செய்தது. இந்தச் சம்பவத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘உத்தரப் பிரதேச மாநில அரசுப் பள்ளிகளைப் பாா்வையிடச் சென்ற தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது மை வீசப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கிறேன். அந்த மாநில அரசுப் பள்ளிகள் அவ்வளவு மோசமான நிலையிலா உள்ளன? உங்களது பள்ளிகளை யாராவது பாா்வையிட வந்தால், நீங்கள் (யோகி ஆதித்யநாத்) அச்சம் கொள்வது ஏன்? உங்களது பள்ளிகளை மறுசீரமைப்பு செய்யுங்கள். மறுசீரமைக்கத் தெரியாவிட்டால், அது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவிடம் பாடம் படியுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com