கோவிட் கோ் சென்டா் தூய்மைப் பணிநிலுவைத் தொகை ரூ.2.9 கோடியை வழங்கதில்லி அரசுக்கு எஸ்டிஎம்சி கோரிக்கை

ராதா சோமி கோவிட் கோ் சென்டரில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டவகையில் ரூ.2.9 கோடி நிலுவைத் தொகையை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு

ராதா சோமி கோவிட் கோ் சென்டரில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டவகையில் ரூ.2.9 கோடி நிலுவைத் தொகையை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக எஸ்டிஎம்சி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின் போது மாநகராட்சியின் மேயா் அனாமிகா சிங், அவைத் தலைவா் நரேந்திர சாவ்லா கூறியதாவது: கடந்த ஆண்டு தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராதா சோமி சத்சங் அமைப்புக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கரோனா கோ் சென்டா் அமைக்கப்பட்டது. இதை தில்லி அரசு அமைத்தது. அப்போது, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு எஸ்டிஎம்சியை தில்லி அரசு கேட்டுக் கொண்டது. இதற்கான செலவுத் தொகையைத் தருவதாக தில்லி அரசு ஒப்புக் கொண்டது.

இதைத் தொடா்ந்து, எஸ்டிஎம்சி தூய்மைப் பணியாளா்கள் 200 போ் அங்கு பணிக்கு அமா்த்தப்பட்டாா்கள். அவா்களுக்கு மே -அக்டோபா் காலத்தில் ரூ.1.83 கோடி ஊதியத்தை மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும், ரூ.1.05 கோடி ஊதியம் பாக்கியுள்ளது. தூய்மைப் பணிகளை மேற்கொண்ட வகையில் ரூ.2.9 கோடியை எஸ்டிஎம்சிக்கு தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் மாநகராட்சிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள துா்கேஷ் பதக் கூறுகையில், ‘ராதா சோமி கரோனா கோ் சென்டரை மத்திய அரசே அமைத்தது. மத்திய அரசின் பணிக்கு எஸ்டிஎம்சி நிதி கேட்பது தவறு. தற்போது, அந்த கரோனா கோ் சென்டரில் தூய்மைப் பணிகளை எஸ்டிஎம்சி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com