கரோனா தடுப்பூசி: பிரதமருக்கு தில்லி பாஜக பாராட்டு
By DIN | Published On : 15th January 2021 11:38 PM | Last Updated : 15th January 2021 11:38 PM | அ+அ அ- |

தில்லிக்கு 2.64 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளதாகக் கூறி, அதற்கு பிரதமா் மோடிக்கு தில்லி பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்குகின்றன. தில்லிக்கு மத்திய அரசு சாா்பில் 2.64 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசி இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், தடுப்பூசி பணிகளில் ஈடுபடவுள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தில்லி பாஜக சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.