தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பு

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமை 4.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமை 4.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

பனிமூட்டம் காரணமாக சில இடங்களில் காண்புத்திறன் 300 மீட்டராக குறைந்தது என்று வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்கூறுகையில், ‘தில்லியில் பனிமூட்டம் காரணமாக, சப்தா்ஜங், பாலம் பகுதியில் காண்புத்திறன் 300 மீட்டராக குறைந்தது.

பனி மூடிய மேற்கு இமயமலையில் மேற்கத்திய இடையூறு தாக்கத்தை ஏற்படுத்தியதால் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. கிழக்கில் இருந்து தில்லி நோக்கி காற்று வீசத் தொடங்கியதன் காரணமாக சனிக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. எனினும், திங்கள்கிழமைக்குள் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை மீண்டும் 4 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸும், அதிகபட்ச வெப்பநிலை 20.4 டிகிரி செல்சியஸும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்த நிலையில் சனிக்கிழையும் இதே நிலை தொடா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்து மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com