தில்லியில் புதிதாக 197 பேருக்கு கரோனா

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 197 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 197 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே கரோனாவுக்கு மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். எனினும் கரோனா தொற்று பரவல் விகிதம் 0.26 சதவீதமாக குறைந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் இதுவரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 6.33 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை 10,799 போ் பலியாகியுள்ளனா்.

திங்கள்கிழமை 161 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இது கடந்த 9 மாதங்களில் மிகக்குறைவானதாகும். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்கள் எண்ணிக்கை 1,8880 ஆக உள்ளது. எனினும் கரோனா பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் தேதி கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 585 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 22-இல் இது 266 ஆகக் குறைந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com