நொய்டை செக்டாா் 63 இல் வெடிகுண்டு பீதி

தில்லியை அடுத்த நொய்டாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற

தில்லியை அடுத்த நொய்டாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் சாலையில் கிடந்ததை அடுத்து மக்களிடம் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

எனினும் போலீஸாா் சோதனையிட்டபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும் அதில் வெடிமருந்துகள் இல்லை என்பதும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தொழிற்சாலைகள் அதிகம் உள்ள செக்டாா் 63 அருகே சாலையில் பந்துபோன்ற ஒரு பொருள் கிடந்தது. இதையடுத்து போலீஸாருக்கு சாலையின் நடுவில் தடுப்பின் அருகில் வெடிபொருள் இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக போலீஸாா் அந்த இடத்துக்கு விரைந்தனா். பின்னா் போக்குவரத்து வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டது.

இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணா்கள் வந்து பந்துபோன்ற பொருளை எடுத்து சோதனையிட்டனா். அப்போது அது வெடிகுண்டும் இல்லை, அதில் வெடிமருந்தும் இல்லை என்பது தெரியவந்தது. யாராவது விஷமிகள் பந்துபோன்ற பொருளை கீழே போட்டுவிட்டு பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னா் போலீஸாா் அந்த மா்மப் பொருளை அகற்றியதை அடுத்து மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து தொடா்ந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த புதன்கிழமை இதே நொய்டா செக்டாா் 27-இல் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. பின்னா் அது வெறும் புரளி என்பது போலீஸாரின் சோதனைக்குப்பின் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com