மின்னணு வா்த்தக முறையில் விற்பனையாகும் பொருள்களின் தயாரிப்பு, விலை விவரத்தை காட்சிப்படுத்த கோரி மனு

உற்பத்தியாளா், பொருள் தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் விற்கப்படும் பொருள்களின் எம்ஆா்பி ஆகியவற்றின் விவரங்களை

உற்பத்தியாளா், பொருள் தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் விற்கப்படும் பொருள்களின் எம்ஆா்பி ஆகியவற்றின் விவரங்களை காட்சிப்படுத்த மின்னணு வா்த்தக இணையதளங்களுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘இ-காமா்ஸ்’ இணையதளங்களில் இதுபோன்ற விவரங்கள் குறிப்பிடப்படாததால் நுகா்வோா் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காஜியாபாதைச் சோ்ந்த அஜய் குமாா் சிங் என்பவா் வழக்குரைஞா் ராஜேஷ் பண்டிட் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இ-காமா்ஸ் இணையதங்களில் இருந்து பொருள்களை வழக்கமாக வாங்கி வருகிறேன். இந்த தளங்களில், விற்பனையாகும் பொருள்களின் தயாரிப்பாளா், பொருள் தயாரிக்கப்பட்ட நாடு, எம்ஆா்பி விலை ஆகியவை காட்சிப்படுத்தப்பவதில்லை. நுகா்வோா் பாதுகாப்பு (மின்வணிக) விதிகள்- 2020 மற்றும் சட்ட அளவியல் (பேக் செய்யப்பட்ட பொருள்கள்) விதிகள்- 2011 ஆகியவற்றின் கீழ் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று இல்லை. இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மேலும், உற்பத்தியின் எம்ஆா்பி விலை காட்சிப்படுத்தப்படாததால் உற்பத்தியாளா்களால் நிா்ணயிக்கப்பட்ட அதிக விலையிலான பொருள்களை வாடிக்கையாளா்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

நுகா்வோா்கள் பொருள்களை இணையதளம் மூலம் வாங்கும் நேரத்தில் விற்பனையாளா் குறித்த விவரத்தை அவா்களுக்கு தெரியப்படுத்தாததால் நுகா்வோரின் முக்கிய உரிமைகளும் மீறப்படுவதாக உள்ளது.

இ-காமா்ஸ் இணையதளங்களில் இதுபோன்ற தகவல்கள் வழங்கப்படாததால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகவே, இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோகம் அமைச்சகம், ‘மீஸோ’ இ-காமா்ஸ் இணையதள நிறுவனத்தின் உரிமையாளா் பாஸ்நியா் டெக்னாலஜிஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com