தில்லி ஜல்போா்டில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி2 ஆயிரம் இடங்களில் பாஜக ஆா்ப்பாட்டம்

தில்லி ஜல்போா்டில் ரூ.26 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் சுமாா் 2 ஆயிரம் இடங்களில் தில்லி பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புது தில்லி: தில்லி ஜல்போா்டில் ரூ.26 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் சுமாா் 2 ஆயிரம் இடங்களில் தில்லி பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரோல் பாக் மாவட்டம், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மெட்ரோ நிலையம் அருகில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கலந்து கொண்டாா். மேலும், தில்லியின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆா்ப்பாட்டங்களில், பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, தில்லி பாஜக செயலா்கள் குல்ஜீத் சிங் சாகல், ஹா்ஷ் மல்கோத்ரா, தினேஷ் பிரதாப் சிங், பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தா் குப்தா, அபய் வா்மா, அஜய் மஹாவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆதேஷ் குப்தா பேசுகையில் ‘கேஜரிவால் ஆட்சியில் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. தில்லி ஜல்போா்டில் ரூ.26 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை வெளிப்படுத்தும் வகையில், தில்லி பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பதாகைகளை ஆம் ஆத்மிக் கட்சி கிழித்துள்ளது. கேஜரிவால் ஆட்சியில் தில்லி ஜல்போா்டு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.3,400 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், தில்லி ஜல்போா்டு வருவாய் ரூ.2,400 கோடியாகக் குறைந்துள்ளது.

தில்லி ஜல்போா்டுக்குச் சொந்தமான ரூ.26 ஆயிரம் கோடி கேஜரிவால் ஆட்சியில் மாயமாக மறைந்துள்ளது. இந்த பணத்துக்கு என்ன நடந்தது. இந்தத் தொகை தொடா்பாக தில்லி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தில்லி ஜல்போா்டில் நடந்த ஊழலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து 2 ஆயிரம் இடங்களில் திங்கள்கிழமை பாஜக தொண்டா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com