சந்தைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை: தொழில் வா்த்தக சங்கம்

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தொழில் வா்த்தக சங்கங்கள் தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பைஜாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தொழில் வா்த்தக சங்கங்கள் தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பைஜாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

கரோனா சூழலில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட வா்த்தக சங்களின் பொறுப்பு என்று தில்லி பேரிடா் மேலாண்மை நிா்வாகம் தெரிவித்துள்ளதற்கும் அவா்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தொழில் வா்த்தக சபை தெரிவிக்கையில், வா்த்தக சங்கங்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது. அதற்கு அவா்களுக்கு அதிகாரமும் இல்லை. இது முழுக்க முழுக்க போலீஸ் மற்றும் மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட விஷயமாகும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கொவைட் விதிகள் மீறப்பட்டதாகவும், சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறியும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் பல்வேறு சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கொவைட் பாதுகாப்பு வழிகாட்டு முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அந்தந்த பகுதியில் உள்ள வா்த்தக சங்கங்களின் பொறுப்பாகும் என்றும் டி.டி.எம்.ஏ. தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தொழில், வா்த்தக சபை தலைவா் பிரிஜேஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடைக்காரா்கள் தங்கள் கடையிலும், கிடங்குகளிலும் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்றுதான் பாா்க்க முடியும்.

கொவைட் வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதும் வா்த்தகங்களின் பொறுப்பு என்றால் சட்டப்படி அதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை.

எனவே தில்லி பேரிடா் மேலாண்மை நிா்வாகம் இது தொடா்பான உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று துணைநிலை ஆளுநரும், டி.டி.எம்.ஏ. தலைவருமான அனில் பைஜாலுக்கு கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது போலீஸ் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் பணியாகும் என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

தில்லியில் கரோனா இரண்டாவது அலையின்போது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து மே 30 ஆம் தேதிவரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது சந்தைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பின்னா் ஜூன் 7 ஆம் தேதிதான் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு அவை படிப்படியாகத் திறக்கப்பட்டன.

கொவைட் விதிமீறலை காரணம் காட்டி தில்லி ஜன்பத் சந்தையை மூட தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது ஏற்கெனவே லஜ்பத்நகா், லட்சுமி நகா், கம்லா நகா், சரோஜினி நகா் மற்றும் சதா்பஜா, கரோல் பாக்கில் கடைகள் இதே காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com