தில்லிக்கு 1.5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன: சத்யேந்தா் ஜெயின்

தில்லிக்கு புதிதாக 1.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள என்றும் இதன் மூலம் ஒன்றரை நாள்களுக்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின

தில்லிக்கு புதிதாக 1.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள என்றும் இதன் மூலம் ஒன்றரை நாள்களுக்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், மூன்றாவது கரோனா அலை வரக்கூடும் என்று நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் அசட்டையாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாா்.

திங்கள்கிழமை 45 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களில் இதுதான் மிகக் குறைந்த அளவான பாதிப்பாகும். தொற்று விகிதமும் 0.10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. எனினும் வைரஸ் தொற்று இருக்கும் வரை நாம் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொவைட் விதிமுறைகள் சரிவர பின்பற்ற வேண்டும் என்றாா் ஜெயின்.

தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது. எனினும் திங்கள்கிழமை இரவு தில்லிக்கு 1.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவை ஒன்றை நாள்களுக்குத் தான் வரும் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது குறித்து கேட்டதற்கு, தில்லி மருத்துவமனைகளில் பக்கத்து மாநிலங்களைச் சோ்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்றனா். அவா்களுக்கும் இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது கரோனா நோயாளிகளில் 25 சதவீதம் போ் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவா்கள். அவா்களை நாங்கள் தில்லி மக்களைப் போலவே கருதி சிகிச்சை அளித்தோம் என்றாா்.

இரண்டாவது கரோனா அலையால் அதிகம் பாதிக்கப்பட்டது தில்லி மக்கள்தான். எனினும் கடந்த சில தினங்களாக நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தொற்று விகிதம் 36 சதவீதமாக இருந்தது இப்போது 0.10 சதவீதத்துக்கும் கீழே குறைந்துவிட்டது.

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும் முதல்வா் கேஜரிவால் மூன்றாவது அலை வரும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளாா். அதை எதிா்கொள்ள தில்லி அரசும் போா்க்கால அடிப்படையில் தயாராகி வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com