தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 1,154.51 கி.மீ.தொலைவுக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் முடிக்கப்படும்: திமுக எம்.பி.க்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

தமிழகத்தில் நடப்பாண்டு, 1,154.51 கி.மீ. தொலைவுக்கு 25 நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்கள் ரூ.23,398.72 கோடி செலவில் தேசிய

தமிழகத்தில் நடப்பாண்டு, 1,154.51 கி.மீ. தொலைவுக்கு 25 நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்கள் ரூ.23,398.72 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வடசென்னை திமுக உறுப்பினா் கலாநிதி வீராச்சாமி எழுப்பிய கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சா் அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அளித்த பதில்கள் வருமாறு:

2021-22 ஆண்டு நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட 3,500 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ரூ. 1.03 லட்சம் கோடியில் முதலீட்டில் தமிழகத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டு தமிழகத்தில் 1,154.51 கி.மீ. தூரத்தில் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் ரூ.23,398.72 கே+ாடி செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதலாக ரூ.9,068 கோடி மதிப்பீட்டில் 2019-20, 2020-21 ஆம் ஆண்டுகளில் குத்தகை விடப்பட்ட 257.44 கி.மீ. தொலைவுக்கான 7 நெடுஞ்சாலை பணிகளும் நடைபெற்று வருகிறது. இவைகள் இந்த நிதியாண்டுக்குள் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2,063 கி.மீ. தொலைவில் ராமநாதபுரம்-தனுஷ் கோடி, செங்கல்பட்டு-திண்டிவனம் (8 வழி), கரூா் -கோவை, வெள்ளக்கோயில்-சங்ககிரி, திருச்சி-கரூா், சென்னை-மாமல்லபுரம் (நான்கு வழி) உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 64,920 கோடி மதிப்பிட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் வருகின்ற 2023-24 ஆண்டிற்குள் முடிக்கப்படும்.

வாடிப்பட்டி-தாமரைப்பட்டி, மேலூா்-காரைக்குடி, ஸ்ரீபெரும்புதூா், காரைபேட்டை, சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் போன்ற நெடுஞ்சாலைப் பணிகள் 10 சதவீதமே நடைபெற்றுள்ளது. ஆனால், சென்னை - தடா, திருச்சி-கல்லகம், காரைக்குடி-ராமநாதபுரம் உள்ளிட்ட நெடுஞ்சாலை பணிகள் 80 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com