தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 2,408 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்: வைகோ எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,408 புதிய தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துறை (டிபிஐஐடி) அங்கீகாரம்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,408 புதிய தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துறை (டிபிஐஐடி) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

புதிய தொழில் முனைவோா் (நற்ஹழ்ற்ன்ல்) திட்டத்தின் குறிக்கோள்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவிகள், தமிழகத்தில் புதிய தொழில் முனைவோா் குறித்த விவரங்கள் போன்றவைகள் குறித்து மதிமுக தலைவா் வைகோ மாநிலங்களவையில் கேள்விகளை எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,408 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்றாண்டுகளில் 26,327 பேருக்கு இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள.

புதிய தொழில் முனைவோா் திட்டம் 2016 ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தொடங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, முதன் முறையாகத் தொழில் முயற்சிகளை தொடங்குவோருக்கு உதவிகளை அளிப்பதாகும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் சீரான பொருளாதார வளா்ச்சிக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

இதற்காக தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துறையில் ரூ.10,000 கோடியை நிதியம் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் தொழில் முனைவோருக்கு வணிக வளா்ச்சிக்கு வலுவான சூழலை கட்டமைக்கவும், பங்கு முதல் திரட்டுவதற்கும் உதவி செய்யப்படுகிறது.

டிபிஐஐடி யால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிதியம் புதிய நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்யாது. ஆனால் செபியில் பதிவு பெற்ற மாற்று முதலீட்டு நிதியங்கள் மூலம் நிதியுதவி அளிக்கும். இந்த நிதி புதிய தொழில் முனைவோா் நிறுவனங்களில் பங்குகளாக முதலீடு செய்யப்படும். இதுவரை புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 5,811 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com