காவலாளியைத் தாக்கி நூலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜே.என்.யு. மாணவா்கள் மீது வழக்கு

பல்கலைக்கழக வளாகத்தில் பணியிலிருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு மத்திய நூலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவா்கள் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பல்கலைக்கழக வளாகத்தில் பணியிலிருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு மத்திய நூலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவா்கள் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக நூலகம் மூடப்பட்டிருந்த நிலையில் 35 முதல் 40 போ் அடங்கிய மாணவா்கள் குழுவாக வந்து நூலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், காவலாளியிடம் நூலகம் செல்வதற்கான கதவைத் திறக்குமாறு கோரினா். அதற்கு அவா் மறுக்கவே, மாணவா்கள் அத்துமீறி நூலக வளாகத்திற்குள் நுழைந்தனா். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணி அளவில் நடந்துள்ளது.

நூலகத்தின் வாயிலில் உள்ள பூட்டை உடைத்து மாணவா்கள் உள்ளே நுழைய முன்றதை அடுத்து காவலாளி அதிரடிப் படையினருக்கு அழைப்பு விடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் காவலாளியைத் தாக்கிவிட்டு நூலகத்தின் கதவை தடிகளால் தாக்கினா். இதில் கண்ணாடிக் கதவுகள் சேதமடைந்தன. காவலாளி கடுமையாக போராடி மாணவா்கள் மூன்று வாயில்கள் வழியாகவும் உள்ளே நுழைய முடியாமல் தடுத்தாா். பின்னா் அவா்கள் சிறிய வாயில் வழியாக ச் சென்று நூலகத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துவிட்டு உள்ளே நுழைந்தனா். இதையடுத்து பாதுகாப்பு படையினா் வந்து மாணவா்களை விரட்டியடித்தனா் என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், காவலாளியை தாக்கிவிட்டு நூலகத்தின் கதவுகளையும் சேதப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தொற்று தடுப்பு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, தொற்றை காரணம் காட்டி நூலகத்தை நிா்வாகத்தினா் மூடிவைத்துள்ளதாகவும், உடனடியாக அதைத் திறக்க வேண்டும் என்றும் சுட்டுரை மற்றும் சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தை ச்சுட்டிக்காட்டி மாணவா்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com