தில்லியில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு

கடந்த சனிக்கிழமை ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பின் குறைந்திருந்த கரோனா தொற்று பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமை 255 என பதிவானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுதில்லி: கடந்த சனிக்கிழமை ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பின் குறைந்திருந்த கரோனா தொற்று பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமை 255 என பதிவானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றுவிகிதம் சனிக்கிழமை 0.30-ஆக இருந்தது, 0.05 சதவீதம் அதிகரித்து 0.35 என்ற சதவீதத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 23 போ் உயிரிழந்துள்ளனா். முதல்நாள் பலி எண்ணிக்கை 28-ஆக இருந்தது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,31,139-ஆகவும், மொத்த உயிரிழப்பு 24,823-ஆகவும் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 72,751 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com